அருள்மிகு அட்சயலிங்கசுவாமி திருகோவிலின் சிறப்பு திட்டங்கள்

 திரு கீழ்வேளூர் திருத்தலத்தின் சிறப்பு திட்டங்கள்

நித்திய கட்டளைத் திட்டம்
          இத்திருக்கோயிலில் தினசரி பூஜைக்கு ஒவ்வொரு நாளும் ரூ.750/- வரை செலவிடப்படுகிறது. இதற்கான நித்திய கட்டளைத் திட்டம் இத்திருத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது. சிவநேயச் செல்வர்கள் இத்திட்டத்தில் பங்குபெற ரூ.7500/- (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) அனுப்பினால் அந்த தொகை வங்கியில் நிரந்தர வைப்பில் வைக்கப்பட்டு, ஆண்டுக்கொருமுறை கட்டளைதாரர் குறிப்பிடும் நாளில் அவர்கள் பெயரில் பூஜை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
தீபக் கட்டளைத் திட்டம்
      அருள்மிகு அட்சயலிங்கசுவாமி ஆலயத்தின் சன்னதிகளில் நெய்தீபம் ஏற்ற நாளொன்றுக்கு ரூ.100 செலவிடப்படுகிறது. தீபம் ஏற்றி, தீவினைகள் அகன்று நல்வாழ்வு பெற இந்த தீபக் கட்டளைத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் ரூபாய் அனுப்பினால் அந்தத் தொகை வங்கியில் நிரந்தரவைப்பில் வைக்கப்பட்டு ஆண்டுக்கொரு முறை கட்டளைதாரர் குறிப்பிடும் நாளில் ஆலயத்தில் தீபம் ஏற்றும் கைங்கர்யம் அவர்களது பெயரில் நடைபெறும்.
அன்னதானத் திட்டம்
இத்திருக்கோயிலில் 11.9.2011 முதல் தினசரி அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆலய வழிபாட்டிற்கு வரும் அன்பர்களுக்கு நாளொன்றுக்கு 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்குபெற விரும்பும் அன்பர்கள் ரூ.1000/-(ரூபாய் ஆயிரம் மட்டும்) செலுத்தினால் அவர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்.
அர்ச்சனை கட்டளைத் திட்டம்
   இத்திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ  குபேரனுக்கு அர்ச்சனை செய்து குபேர சம்பத்துக்கள் பெறவும், வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கும் அன்னை அஞ்சுவட்டத்தம்மனுக்கு அர்ச்சனை செய்து அருள் பெறவும் விரும்பும் அன்பர்கள் ரூ.50/-க்கு பணவிடை (மணியார்டர்) (அர்ச்சனை ஒன்றுக்கு) அனுப்பினால் அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.