திருக்கோவில் திருத்தல தனி சிறப்பு
மண்டுபேரொளியான
கேடிலியை அர்ச்சித்த
வள்ளி நாயகன் வருகவே!
மாகாளி
காத்த கீழ்வேளூரில் மாதவம்
வளர்த்த வேலவன்வருகவே !
-ஷேத்திரகோவை பிள்ளைதமிழ் –வாரானைப்பருவம்
காஞ்சி
ஸ்ரீ சிதம்பரமுனிவரின் இப்பாடல் வரிகள் வீரஹத்தித் தோஷம் நீங்க குமரக்கடவுள்
இத்தலத்தில் தவமியற்றி வழிபட்ட வரலாற்றை விளங்க செய்கிறது குமரக்கடவுள்
பூசித்தமையால் இத்தலம் பூசரண்யபுரமென்று சிறப்பிக்கப்படுகிறது.
இத்திருத்தலம்
மகா கல்பம் என்று சொல்லபடுகின்ற ஒரு பிரம்ம கல்பம் முடிந்து உலகமெங்கும் மகா
பிரளயம் என்ற பேரூழியால் நீர் சூழ்ந்து உயிர்கள்
அனைத்தும் மூலபொருளாக விளங்கும் சிவபிரானிடத்தில் ஒடுங்கி இருந்து பின் மீண்டும்
இறைவர் உயிர்களை படைக்கதொடங்கும்.சிறப்புக்குரியது ஆகும்.திருக்கடவூர்
திருத்தலத்தில் காலனை காலால் உதைத்து தனது பக்தனாகிய ஸ்ரீ மார்கண்டேய மகரிஷிக்கு
“என்றும் பதினாறு “ என்ற பெரும்பேற்றை
அளிக்க ,அவரும் யுகங்கள் தோறும் இடைவிடாது சிவபூஜை செய்து வருகையில் பிரம்ம கல்ப
முடிவினால் பேரூழி ஏற்பட அதனால் தன் சிவபூஜைக்கு இடையூறு வருகிறதே என்று வருந்தி
இறைவனிடம் பேரூழியிலும் இடையூறின்றி சிவபூஜை நிகழ்த்த ஓர் இடத்தைக்
காட்டியருளும்படி வேண்டி நிற்க,இறையனாரும் “மிகுந்த மகத்துவங்கள் நிறைந்ததும்
,நமக்கு மிகவும் விருப்பமுடையதுமான தக்ஷிண பதரிகாரண்யத்தலம் சென்று நீர் நம்மை
தொடர்ந்து வழிபட்டு வரலாம் “என்று திருவாய் மலர்ந்தருளியபடி ஸ்ரீ மார்கண்டேய
முனிவரும் இத்தலம் வந்து தங்கி தனது சிவவழிபாட்டை விடாது தொடர்ந்த
சிறப்புக்குரியது இத்தலம்.இத்தலத்தில் பாரதத்தின் பல்வேறு திருத்தலங்களில்
எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைமூர்த்தங்கள் எல்லாம் தனி தனியே சன்னதி கொண்டு
இத்தலபிரகாரம் முழுவதும் விளங்குவதில் இருந்தே இத்தலத்தின் தொன்மையும்
,பேரூழியிலும் அழிவின்றி விளங்கும் தனிசிறப்பும் சொல்லாமல் விளங்கும்.
மேலும்
தன் மைந்தனாம் குமரனின் தவம் காக்க அன்னை எட்டு திருகரங்களுடன் பத்ரகாளி
திருஉருவாய் ஸ்ரீ அஞ்சுவட்டதம்மன் என்ற
பெயரோடு விளங்குவதும் ,இந்திரன் சாபம் நீங்க வழிபட்ட தேவ நாயகர் எழுந்து அருளி
இருப்பதும் இசை கலைஞர்களுக்கு இசை ஞானம் வழங்கும் விதத்தில் ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி
வீணாதர தெட்சிணாமூர்த்தி ஆக அருள்வதும் ,ஆடல்வல்லான் தமிழ் முனியாம் அகத்தியருக்காக
தேவசபையோடு கால் மாறி ஆடிய சிறப்புடையதும்,ஸ்ரீ குபேர பகவான் இத்தல இறைவனை யுகாதி
திருநாளாம் அக்ஷய திருதியை திருநாளில் வழிபாடுகள் செய்து அதன் பயனாய் சங்கநிதி
பதுமநிதிகளோடு குபேரபட்டம் பெற்று
அளகாபுரி ஆட்சிபொறுப்பைபெற்றபெருமைக்குரியதும்,பஞ்சபூதங்களுக்கு உரிய
லிங்கங்களும் தனி தனியே கோவில் கொண்டு அருளும் புகழ் உடையதும்,ஸ்ரீ விநாயக
பெருமான் ,சுந்தர கணபதியாக முக்குறுனிபிள்ளையாராகவும்,முப்பத்திரண்டு கணபதிகள் எழுந்து அருளியிருக்கும் சிறப்புடையதுமான
,திருக்கீழ்வேளூர் திருத்தலத்தில் எழுந்தருளி
அருளும் இறைவர் அ/மி அட்ச்யலிங்கசுவாமி என்கிற அ/மி கேடிலியப்பர் .அம்பிகை
ஸ்ரீ சுந்தர குசாம்பிகை என்கிற அருள்மிகு வனமுலை நாயகி ,இங்கு தல விருட்சம் இலந்தை (பதரி)
மரமாகும் .மூவர் தேவாரம் பெற்ற சிறப்பும் உடையது இத்திருத்தலம்.